விரைவில் விந்து வெளியாதல்இது அனேக காரணங்களினால் நேரிடும்.

A. சுக்கிலவாகி, சுக்கிலக் குழல் ஆகிய இவைகளின் சுக்கிலத்தை ஏந்திக்கொள்ளுஞ் சக்தியானது. குளிர்ச்சியதிகரிப்பதாலும், கொழுமை யதிகரிப்பதாலும், துர்ப்பலப்பட்டுப் போவதால் துரித ஸ்கலித முண்டாகும்.

அடையாளம்- இந்திரியமானது நீர்த்து, வெளுத்து அளவில் அதிகரித்து, வெளிப்படும் அதில் கொஞ்சமும் சூடிராது, மேலும் சூட்டின் குணமும் ஒன்றுமிராது.

சிகிச்சை:- முன்னர் (மாமூதா) (இது நஞ்சின் குணமுடையதாகையால் மிகவும் சாக்கிரதையுடன் உபயோகப்படுத்த வேண்டும்.) (Scammany) சேர்ந்த அவுடதங்களினால் அசுத்த சத்துக்களை வெளிப்படுத்த வேண்டியது; வாந்தி அவுடதங்களைக் கொடுத்து வாந்தி செய்விக்க வேண்டியது. அரையிலும், சந்துக்களிலும், ஆண்குறியிலும், குங்குமப்பூ, நீலோற்பலம் புஷ்பம், கோஷ்டம், [ஆஸ்] (Myrtle) ஆகிய இவைகளின் ஒன்றின் எண்ணெயைப் பூசி வரவேண்டியது. (பஞ்சோஷ) (Fanjoshe) பாவனத் திராவகம், அரப்பொடி, மாஜூன் முதலிய அவுடதங்களினால் மிகு பிரயோ சனமுண்டாகும். அரைப்பலம் கஞ்சாவிதையை ஆழாக்கு சலத்தில் ஊற வைத்து மூன்றிலொன்றாய்க் காய்ச்சி வடிகட்டி ஒரு துலா எடை தேன்விட்டு இரண்டுவேளையும் சிலநாள் சாப்பிடுவதாலும் நிவர்த்தியாகும்.

கிச்சடிச் சாதமும், ஆட்டிறைச்சியோடு கோரைக் கிழங்கு, சீரகம், ஆகிய இவற்றில் ஒன்றைச் சேர்த்துச் சமைத்த கறியும், சாப்பிடுவதனாலும் மிகு பிரயோசனமுண்டாகும்.

B. தேகத்தில் இரத்தம் அதிகரிப்பதாலும், சுக்கிலம் அதிகம் விளைவதாலும் நெடுநாள் மணவாழ்க்கையை நீக்கிவைப்பதாலும் துரித ஸ்கலித முண்டாகித் தாது நஷ்டப்படும்.

குறிகள்: இந்திரியம் சீக்கிரம் வெளிப்படுவதுடன் சுக்கிலம் அளவில் அதிகாயிருக்கும். அது மிதமாய்ப் பக்குவப்பட்டதாயிருக்கும்; ஆண் மர்ம ஸ்தானத்தின் சக்தியும் மிதமாயிருக்கும். சிலருக்குச் சொப்பனஸ்கலிதம் அதிகமுண்டாகும். அப்படி யுண்டானாலும் தேகசக்தி குறையாது. தேகம் வலுவாகவே யிருக்கும்.

சிகிச்சை:- நெடுநாள் மணவாழ்க்கையை விட்டிருந்ததால் உண்டாயிருந்தால், அடிக்கடி வாழ்வதனால் நிவர்த்தியாகும். இரத்த மிகுதியினால் உண்டாயிருந்தால் இரத்த்தை அதிகப்படுத்தும் ஆகாரங்களாகிய மாமிச இனங்களையும், பருப்பினங்களையும் நீக்கிவிட வேண்டியது; அல்லது அவைகளை மிகவும் குறைந்த அளவாய் உபயோகித்து வரவேண்டியது.

சாதாரணமாகிய ஆகாரத்திலும் கொஞ்சம் குறைவாய்ச் சாப்பிட்டு வரவேண்டியது காடி ஷர்பத், திராக்ஷக்காய் அல்லது பச்சைப் பேரீச்சங்காய் ஷர்பத் முதலியவைகளில் ஒன்றை உபயோகித்தும் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியது.

C. சுக்கிலத்தில் சூடும் தீக்ஷணியகுணமு முண்டாகி விடுவதனாலும் துரிதனாலும் துரிதஸ்கலித முண்டாகும், எப்படியெனில் மணவாழ்க்கைக் கெத்தனித்த தக்ஷணத்தில் அல்லது தேகம் ஒன்றோடொன்று சேர்ந்தவுடன், ஆண்மர்ம ஸ்தானத்தில் எழுச்சி உண்டாவதனால் பலம், துர்ப்பலம் ஆகியவைகளுக்குத் தக்கபடி சூடும் தீக்ஷணியமும் அதிகரிக்கும். அதனால் சுக்கிலக்குழலில் வருத்தமுண்டாகும். ஆகையால், அவை உடனே சுக்கிலத்தை வெளிப்படுத்திவிடும்.

அடையாளம்: சுக்கிலம் வெளிப்படும்போதுவருத்தமும் எரிச்சலுண்டாகும் சுக்கிலத்தில் வருணம் மஞ்சள் வருணமாகவும், இலேசானதாகவுமிருக்கும்.

சிகிச்சை:- பருப்புக்கீரை வீதை, காஹூவிதை, புளிச்சக்கீரை விதை ஆகிய இவைகளில் ஒன்றில் அரைப்பலம் அரைத்துப் பிழிந்த ரசம் அரை ஆழாக்கில் ஒரு பலம் கசகசா ஷர்பத்துவிட்டுச் சாப்பிடுவதனாலும் அரிசியும், மசூரிப் பருப்பும் சேர்த்துச் சமைத்த சாதத்தில் கசகசாவை வறுத்துச் (சட்னி) சுண்டாங்கியாகவாவது அல்லது குழம்பாகவாவது செய்து சேர்த்துச் சாப்பிடுவதனாலும், மேற்கண்ட சரக்குகளில் இஷ்டமானதை அரைத்து மேலே பூசுவதனாலும் நிவர்த்தியாகும்.

D. தலைமூளை முதலாகிய இராஜகருவிகள் பலஹீனப்பட்டு போவதனால் மற்ற உறுப்புக்களும் துர்ப்பலப்பட்டுத் துரிதஸ்கலித முண்டாகும். இவ்வகையான துரிதஸ்கலிதத்தினால் தாதுநஷ்டப் படாதிராது. ஏனெனில், இராஜகருவிகள் பலஹீனப்பட்டால் அவற்றோடு நெருங்கிய சம்பந்தமுடைய சுக்கிலத்திற்கும் அவசியம் நஷ்டம் நேரிடும். ஆகையால், இராஜ கருவிகள் ஒவ்வொன்றிற்கு முரிய பலஹீனத்தின் காரணம் அடையாளம், சிகிச்சை முதலியவைகளைச் சகலரும் அறிந்திருத்தல் வேண்டும்; இவை முன்னர் சொல்லப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *