ஆண்மை அதிகரிக்க எளிய உணவுக்குறிப்பு

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும்.

முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம்.

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்மை அதிகரிக்க ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர்.

விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம். தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது. தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *