ஆண்மை கோளாறுகள் நீங்க பாதாம் பிசின் பாயசம்
தேவையானவை:
பாதாம் பிசின் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
சாரப்பருப்பு – 25 கிராம்
பாதாம்பருப்பு – 25 கிராம்
சாலாமிசிரி – 25 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
செய்முறை:
பாதாம் பிசினை சுத்தம் செய்து ½ லிட்டர் தண்ணீரில் இரவிலேயே ஊற வைக்கவும்.
காலையில் பாதாம் பிசினில் உள்ள நீரை ஊற்றிவிட்டுச் சிறிது வெந்நீர்விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும்.
பிற சரக்குகளைத் தூள் செய்து பிசினோடு சேர்க்கவும். சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி பாயசம் பதத்தில் இறக்கவும்.
பாதாம் பிசின் பாயசம் குடற்புண்ணை குணப்படுத்து. உடல் மெலிவானவர்கள் இந்தப் பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட தேவையான எடையைப் பெறலாம்.
வெள்ளைப் படுதல் உள்ள பெண்கள் கண்டிப்பாக இதை செய்து சாப்பிட வேண்டும்.
வெட்டைச்சூடு குணமாகும். ஆண்மை கோளாறுகளுக்கும், துரித ஸ்கலிதத்துக்கும் மிகவும் உபயோகமானது.