Body Heat
உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது.உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் எரிச்சல், வயிற்றில் அசெளகரியம், புண்கள், அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.
உடல் உஷ்ணம் உண்டாகும் போதெல்லாம் சிறுநீர் கடுப்பு, கண்களில் எரிச்சல் பிரச்சனை, இந்த நேரத்தில் மிகப்பெரிய பிரச்சனை உடல் நீரிழிப்பை சிறிது சிறிதாக அதிகப்படுத்தி கொண்டிருப்பது தான்.
எதனால் உடல் உஷ்ணம் உண்டாகிறது என்று சரியான காரணத்தை சொல்ல முடியாது. ஏனெனில் தீவிரமான வெப்பநிலையில் உடல் இருக்கும் போது, போதுமான நீரை காட்டிலும் மிக குறைவாக உடல் பெறுவது, அதிக கடினமான உணவு, மசாலா உணவுகளை மட்டுமே தொடர்ந்து பெறுவது என எல்லாமே உடல் உஷ்ணத்தை உண்டாக்க கூடியவை தான்.
சில பேருக்கு திடீரென உடல் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்து விடும். இப்படி உடல் வெப்பநிலை அதிகரிப்பதை அசால்ட்டாக விடக் கூடாது. உடல் உஷ்ணத்தை குறைக்க, குளிர்ந்த நீரில் பாதங்களை நனைப்பது, காற்றோட்டமான ஆடைகளை அணிவது இன்னும் பல விஷயங்கள் நம் உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. நம் உடலின் வெப்பநிலையை பராமரிப்பது மிகவும் அவசியம்.
பல காரணிகளால் நம் உடல் வெப்பநிலையானது உயர வாய்ப்பு உள்ளது. தொற்று போன்ற அழற்சி இவற்றால் காய்ச்சல் ஏற்படக்கூடும்
ஹைப்பர் தைராய்டிசம் எனப்படும் தைராய்டு கோளாறு இருப்பது. இது உங்கள் உடலில் அதிக தைராய்டு ஹார்மோனை உருவாக்குகிறது. இதனாலும் உடல் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. மிகவும் வெப்பமான காலநிலையில் அதிக நேரத்தை செலவிடுவது. சூரிய ஒளியில் நேரடியாக இருப்பது.
இறுக்கமான செயற்கை இழை ஆடைகளை அணிந்து இருப்பது. இந்த வகையான துணிகள் சருமத்தை சுவாசிக்க விடாது.
காரமான, எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை உண்ணுதல். நட்ஸ், இறைச்சி வகைகள், அதிக புரோட்டீன் உணவுகள் போன்றவை வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
காஃபின் அல்லது ஆல்கஹால் பானங்களை அருந்துவது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்வது போன்றவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடம்பு சூட்டை அதிகரிக்கிறது.
கீல்வாதம், ரத்த புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற உங்கள் உடல் வெப்பநிலையை பாதிக்கும் சில மருத்துவ நிலைகள்
சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஓபியாய்டுகள் மற்றும் ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற அதிக உடல் வெப்பநிலையை ஏற்படுத்தும் மருந்துகளை எடுத்துக்கொள்வது.
நீரிழப்பு இருந்தால் வியர்வையை குறைத்து உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
பல காரணிகளால் நம் உடல் வெப்பநிலையானது உயர வாய்ப்பு உள்ளது. தொற்று போன்ற அழற்சி இவற்றால் காய்ச்சல் ஏற்படக்கூடும்.