துரித உணவுகளின் தீமைகள்
இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் வர கூடிய பிரச்சனைகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் தான் காரணம். இதனை மருத்துவர்களும் கூறியுள்ளனர். நம்முடைய உணவு முறைகள் மாறியதால் ஏற்பட்ட விளைவு தான் பலருக்கு ஆரோக்கியம் இல்லாமல் அதிக நோய்களால் பாதிக்கப்படுகிறோம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்க காரணம் நாம் சரியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான். கடைகளில் விற்கும் உணவு பொருள்களில் உள்ள சுவைக்காக நாம் அதனை வாங்கி உண்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாம் அப்போது சிந்திப்பதில்லை. நம்முடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருக்க முக்கிய காரணம் நம்முடைய சுற்றுசுழலும் மாற்றும் நம் உணவு பழக்கமும் தான்.
நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை தருவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்நாட்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். ஆரோக்கியமான உணவு என்பது நா வீட்டில் நாம் செய்யும் உணவுகளில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்.
நம்முடைய உடலுக்கு தேவையான உணவு பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது தான் ஆரோக்கியமான உணவு ஆகும். இதற்காக கடைகளை ஆற்றல் தரும் பவுடர்களை வாங்கி உண்பதால் தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும். எனவே அவற்றை தடுப்பது நல்லது. மேலும் இயற்கை முறை உணவு பொருட்களை சாப்பிடுவதால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே நோய்கள் அண்டாமல் வாழமுடியும். உணவை பொறுத்தவரை நன்றாக மென்று சாப்பிட்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். இதை உணர்ந்து அதையே கடைப்பிடித்தவர்கள் நம் பெரியோர்கள்.அதையே இன்று ஊட்டச்சத்து மற்றூம் சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இது என்ன சாப்பாட்டை மென்று தான் சாப்பிட முடியும் என்று கேட்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் உணவை மென்று சாப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை. அவசர அவசரமாக விழுங்கி, நின்று கொண்டு சாப்பிடுவது, வேறு எதையாவது நினைத்து யோசித்தப்படி, அரட்டை அடித்தப்படி இப்படித்தான் இருக்கிறார்கள். அப்படியெனில் கவனம் எப்படி சாப்பாட்டில் இருக்க கூடும். பிறகு எப்படி சாப்பாட்டை ரசித்து சாப்பிட முடியும். மென்று சாப்பிட முடியும். ஆனால் சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டால் உடல் அற்புதமான நன்மைகள் பலவற்றையும் பெறுகிறது. அப்படி என்னென்ன நன்மைகள் உடல் பெறுகிறது என்பதை பார்க்கலாம்.
· ஆரோக்கியமான எடை
உடல் எடை அதிகரிக்க கூடாது என்று நினைப்பவர்கள் எந்த உணவை சாப்பிடுகிறோம் என்று கவனம் செலுத்துவதை விட எப்படி சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.உணவை மென்று பொறுமையாக சாப்பிடும் போது உடனடியாக சாப்பிட முடியாது.அவசரமாக சாப்பிடுவதை காட்டிலும் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்களாவது ஆக கூடும். இதனால் அதிகமான உணவு உள்ளே செல்வது தடுக்கப்படும். ஏனெனில் பொறுமையாக மென்று சாப்பிடும் போது மூளை உணவு நிறைவாக பெற்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது.
· கொழுப்பு சேராது
உடலில் கொழுப்புகள் சேர்வதுதான் நோய்க்கான அடித்தளமே. இந்த கொழுப்புகள் சேராமல் தடுக்கவே மென்று சாப்பிட வேண்டும் என்கிறார்கள். நாம் உணவை உமிழ்நீரோடு மென்று சாப்பிடும் போது உமிழ்நீரில் இருக்கும் சில நொதிகள் உணவை உடைக்க செய்கிறது. உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படும் சுரப்பிகளில் லிபேஸ் என்னும் நொதியும் ஒன்று. இது உணவில் இருக்கும் கொழுப்பை உடைக்க செய்கிறது.
· செரிமானம் சீராகிறது
உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று செரிமானம் சிக்கலில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இந்த செரிமானம் ஆக உடலுக்கு ஆற்றல் தேவை. சாப்பாடு முழுமையாக செரிமானம் ஆக வேண்டும். இது குடல் இயக்கங்களை சீராக்கும். ஊட்டச்சத்துகள் உடல் உறிஞ்சும். மலச்சிக்கல் பிரச்சனையில்லாமல் கழியும். ஆனால் உண்ணும் உணவு செரிமானத்தில் சிக்கலாகும் போது எல்லாமே குறைபாட்டை உண்டாக்குகிறது.
உடல் ஏற்கனவே செரிமான பிரச்சனையை கொண்டிருந்தால் உண்ணும் உணவு எளிமையானதாக இருந்தாலும் உண்ணும் முறை அவசரமாக இருந்தால் செரிமானம் பிரச்சனை ஆகவே செய்யும். அதனால் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம் உணவு உணவுக்குழாயில் அழுத்தம் இல்லாமல் எளிதாக சென்று வயிற்றின் பணியை சுலபமாக்குகிறது. உணவு வேகமாக உடைவதால் செரிமானம் தாமதமில்லாமல் நடக்குகிறது.
- சத்துகள் உடலுக்கு செல்ல
பெரும்பாலான சத்துகளும், தாதுக்களும் நாம் உண்ணும் உணவின் மூலமே பெறப்படுகிறது. பலவிதமான சத்து நிறைந்த பொருள்களை சேர்த்து உணவாக எடுத்துகொள்கிறோம். இரும்புச்சத்து, புரதம், கால்சியம், துத்தநாகம் என இன்னும் பல வகையான சத்துகள் இதில் உள்ளது. இதில் புரதங்கள் மிக முக்கியமானவை. இது உடலில் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது.
இது உடலின் வளர்ச்சிக்கு முக்கியமானவதும் கூட. ஆனால் இதை உடல் சேமித்துவைக்க முடியாததால் இதை உடல் தேவையான அளவு நிறைவாக பெற வேண்டும். உணவை மென்று சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் இந்த சத்துகள் உறிஞ்சப்படுகிறது. இல்லையெனில் இந்த சத்துக்கள் உறிஞ்சப்படாமல் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் தடைபடவும் செய்யும்.
உணவை மென்று சாப்பிடுவதன் மூலம் உடல் பெறும் நன்மைகள் குறித்து பார்த்தோம். இந்த நன்மைகள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் போது உணவுக்கு நடுவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதோ அல்லது வேறு பானங்கள் இடையில் குடிப்பதோ தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் போது கவனம் முழுவதும் சாப்பாடு மீது மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான அளவான உணவை எடுக்க முடியும். ஒவ்வொரு கவளத்தின் மீதும் கவனம் கொண்டால் மட்டுமே உணவை மென்று சாப்பிட முடியும்.