Oligospermia

இன்றைய காலக்கட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்களால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைகிறது. ஆண்களில் குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தால், அது அஸோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. விந்தணுவில் ஒரு மில்லிலிட்டருக்கு 15 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் இருந்தால், உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாகவே கருதப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

விந்தணு குறைப்பாட்டுக்கான காரணம்

வாழ்க்கை முறை மாற்றமே விந்தணு குறைப்பாட்டுக்கான முக்கிய காரணங்கள் ஆகும். வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு நிதானமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். ஆனால், அதனை யாரும் செய்வதில்லை. வேகமான ஓட்டம் காரணமாக மனஅழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது நேரடியாக விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இவை தவிர சில தவறான பழக்க வழக்கங்களும் காரணம். மது பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளன.

குறைந்த விந்தணு அறிகுறிகள்

கணவன் – மனைவி கருத்தரிப்பதில் சிரமம் இருந்தாலே விந்தணு குறைப்பாடு சோதனை மேற்கொள்வது அவசியம். இதுதவிர வெளிப்படையாக வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஹார்மோன்கள் மாற்றம்கூட விந்தணுக்களின் எண்ணிக்கை உற்பத்தியை பாதிக்கும். பாலியல் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள், பாலியல் ஆசை குறைதல் போன்றவையும் விந்தணு குறைபாட்டுக்கான காரணங்கள். விந்தணுக்களில் வலி, வீக்கம் மற்றும் கட்டிகள், முடி கொட்டுதல், குரோமோசோம்கள் அல்லது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு ஆகியவை இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு இருக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருந் தாலும் கூட கரு உருவாவதில் சிக்கல் உண்டாகும். இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இது பிறக்கும் போது உண்டாகும் குறைபாடு அல்ல. ஆண்கள் அன்றாட வாழ்விலும் உணவு முறையில் ஏற்படுத்தி கொண்ட அதிக படியான மாற்றங்களின் எதிரொலிதான் விந்தணுக்கள் குறைபாட்டுக்கு பெரிய காரணம்.

ஆய்வு ஒன்றிலும் நவீன உணவு பழக்கத்துக்கு மாறிய ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளது.
ஆரோக்கியமான வீரியமிக்க விந்தணுக்கள்
ஆண்களின் விந்தணுக்களானது விந்து வெளிப்படும் போது 2 ml விந்தணுக்கள் வெளிப் பட வேண்டும். இதில் பாதி அளவிலேயே 15 மில்லியன் அளவு விந்தணுக்கள் இருக்க வேண்டும். இதிலும் 50% அளவு விந்தணுக்கள் வீரியமிக்கவையாக இருக்க வேண்டும் . இதில் 4 % வீரியம் குறைந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை.
இவை தவிர்த்து வீரியமிக்க விந்துக்களானது கருப்பையில் வேகமாக வீரியத்தோடு ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஆரொக்கியமானதாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் ஆண்களுக்கு குறைபாடில்லை.

வீரியம் குறைந்த விந்தணுக்கள்
சில ஆண்களுக்கு அதாவது குறைபாடு கொண்டிருக்கும் ஆண்களுக்கு பரிசோதிக்கும் போது அவர்களுக்கு விந்து வெளியாகும். ஆனால் அதில் விந்தணுக்கள் அதாவது உயிர ணுக்கள் இருக்கவே செய்யாது. இத்தகைய ஆண்களால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியும், இதில் குறையிருக்காது. ஆனால் வீரியமிக்க விந்தணுக்களில் உயிரணுக்கள் இல்லாததால் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.