No Sperm Count

குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாக பெண்களை மட்டுமே குறை சொன்ன காலத்திலிருந்து மீண்டு விட்டோம். அதே நேரம் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியரின் எண்ணிக்கையும் சமீப வருடங்களில் மிகப்பெருமளவு அதிகரித்திருக்கிறது. மலட்டுத்தன்மை என்பது இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலை ஆகும். ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ கூட சில குறைபாடுகளால் குழந்தையின்மை பிரச்சனை உண்டாகும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பெருமளவு இந்த பிரச்சனையை தவிர்த்துவிட முடியும். ஆண் மலட்டுத்தன்மையில் விந்தணுக்களின் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளப்படும். இது குறித்து பார்க்கலாம்.

விந்தணுவின்மை என்பது ஒரு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையாகும். இது ஒரு ஆணின் விந்தணுவில் விந்தணுக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. உங்கள் மனைவி கருவுற முடியாமல் போனால் அதனை சோதனை மூலம் சரி செய்து கொள்ளலாம். விந்தணுவின்மை காரணமாக விந்தணுக்கள் உங்கள் உடலில் உற்பத்தி ஆகாமல் இருக்கலாம் அல்லது விந்தணுக்கள் உங்கள் உடலிலிருந்து வெளியேறாமல் இருக்கலாம்.
விந்தணுவின்மை அறிகுறிகள்

ஆண்கள் அவர்களின் பார்ட்னர் கருத்தரிக்காத வரை இப்படி ஒரு பிரச்சனை அவர்களுக்கு உள்ளது என்பதை அறியமாட்டார்கள். இருப்பினும் சில அறிகுறிகள் ஹார்மோன் பிரச்சினைகள் அல்லது மரபணு பிரச்சினைகள் காரணமாக கூட ஏற்படலாம். இநோயினால் ஏற்படும் சில அறிகுறிகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

• விந்தணுவின்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம். உடலுறவு கொள்ளும் போது தேவையான விறைப்புத்தன்மை பல ஆண்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்த அளவான விறைப்புத்தன்மையும், நீங்கள் விந்தணுவின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கலாம்.

• இவர்கள் குறைந்த செக்ஸ் இயக்கத்தை பெறுகிறார்கள். இது ஒரு உளவியல் காரணத்தால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ள ஆண்கள் சுய மரியாதையை இழப்பதாக கருதுகிறார்கள். மேலும் அவர்களது பார்ட்னரை நோக்கி ஈர்க்கப்படுவது மிகவும் குறைவு என அவர்கள் எண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் அதிக சோர்வாகவும் மன அழுத்தமாகவும் உணரக்கூடும்.

• இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோன் சுரக்கிறது. டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக இருப்பதால் முகம், மார்பு, இடுப்பு பகுதி மற்றும் மற்ற உடல் பகுதிகளில் முடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும். சில காயங்கள் காரணமாகவும் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சியின்மையை பிரச்சனையை சந்திக்க நேரிடும். திடீரென ஏற்படும் வழுக்கை உங்கள் உடலில் பிரச்சினை உள்ளது என்பதை குறிக்கிறது.

• இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது விரைகளை சுற்றி வலி அல்லது வீக்கம் பிரச்சினையை அனுபவிக்கலாம். உங்கள் இடுப்புப் பகுதியில் ஏதேனும் வீக்கம் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். சிலருக்கு பாலியல் உடலுறவுக்கு பிறகு வலி மற்றும் அதிகரித்த வீக்கம் இருப்பதாக கூறுகின்றனர். இது ஏதேனும் அடைப்பு காரணமாக ஏற்படலாம். எனவே உங்களது இடுப்புப் பகுதியில் ஏதேனும் வீக்கம் இருப்பதாக நீங்கள் அறிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

• நோயாளிகள் தங்களது விரைகளில் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இது ஒரு நாள் பட்ட பிரச்சனையாக கூட இருக்கலாம். டெஸ்டிகுலாரில் வலி ஏற்படுவது விந்தணுக்கள் மற்றும் பிற உள்ளுறுப்புகளில் உள்ள பிரச்சினைகளை குறிக்கலாம். பெரும்பாலான நேரங்களில் இத்தகைய சூழ்நிலைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டால், கடுமையான உறுப்பு சேதத்திற்கு அது வழிவகுக்கும்.

• உயிரணுக்கள் வரும் பாதையில் அடைப்பு -விந்து உற்பத்தி ஆகும் செக்டோலி செல்ஸ் என்று சொல்வார்கள். தினமும் இங்கு கோடிக் கணக்கில் விந்தணுக்கள் உற்பத்தி ஆகின்றன. இவை உறவின் போது விந்துப்பையை கடந்து யூரித்ரா வழியாக வெளியேறி கருப்பை வாயில் நுழையும். இது பயணிக்கும் தூரம் கிட்டதட்ட 4 மைல் தூரங்கள் அளவு இருக்கும். இந்த விந்தணுக்கள் வெளிவரும் இந்த பாதையில் அடைப்பு இருந்தால் விந்தணுக்களில் உயிரணுக்கள் இல்லாமல் போகலாம். இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு அடைப்பு சரிசெய்தாலே போதுமானது. அடைப்பை சரிசெய்ய முடியாத பட்சத்தில் விந்தணுக்களை நேரடியாக பிரித்து கருமுட்டையுடன் இணைப்பார்கள்.