டெஸ்டோஸ்டிரான்

டெஸ்டோஸ்டிரான் என்பது ஆண் பாலின ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருந்தால் விந்தணுக்கள் குறைபாடு உண்டாகும்.

ஆண் குழந்தை பிறந்து பருவ வயதை அடையும் போது டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் விந்தணுக்களில் உருவாக்கப்படுகிறது ஆண்களின் ஆண்மைக்கு உதவுவது இந்த டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் தான். ஆணுக்கு இந்த ஹார்மோன் அளவு அதிகமாக இருந்தால் தான் எலும்புகள், ரத்த நாளங்கள், இதயம், மூளை, எலும்புகள், பிறப்புறுப்புகள் என எல்லாமே ஆண்மை தன்மையில் குறையில்லாமல் வைத்திருக்கும்.

ஆண்மைதன்மையோடு இல்லற வாழ்க்கையில் இனிமையாக இருக்க விரும்பும் ஆண்கள் வளரும் காலம் முதலே இந்த ஹார்மோன் குறைபாடில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இவை விந்தணுக்களில் குறைபாடை உண்டாக்கி குழந்தைபேறின்மையை உண்டாக்கிவிடும்.

ஆய்வு ஒன்று பெரிய அளவில் மேற்கொள்ளும் போது தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப் பட்டது. உடல் பருமனான ஆண்கள் எடை இழப்புக்கு உணவை காட்டிலும் அதிகரித்த உடல் செயல்பாடு பயனுள்ளதாக இருந்தது என்கிறது ஆய்வு ஒன்று.
உடற்பயிற்சிகளிலும் எடை தூக்குதல், குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி இரண்டுமே டெஸ்டோஸ்டிரானை அதிகரிப்பதற்கான சிறந்த வகை உடற்பயிற்சி.

அன்றாட உணவுகளில் நிறைவான அளவு புரதம், கொழுப்பு, கார்ப்ஸ் மூன்றையும் எடுத்துகொள்வதன் மூலம் டெஸ்டோஸ்டிரான் மற்றும் பிற ஹார்மோன் அளவுகளில் மாற்றத்தை உண்டாக்குகிறது. அதனால் அன்றாட உணவில் கலோரி உட்கொள்ளல் மற்றும் எடுத்து கொள்ளும் உணவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் அதிகப்படியான உணவு டெஸ்டோஸ்டிரான் அளவை சீர்குலைக்கவும் செய்யலாம். போதுமான புரதம் ஆரோக்கியமான அளவை பராமரிக்க செய்வதோடு கொழுப்பு இழப்புக்கும் உதவும். ஆராய்ச்சி மூலம் கார்ப்ஸ் வகைகளும் டெஸ்டோஸ்டிரானை மேம்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஆண்கள் மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் அளவை குறைக்க செய்தால் ஹார்மோனின் அளவை உயர்த்தக்கூடும். நீண்டகால மன அழுத்தத்தின் ஆபத்துக்களை ஆராய்ச்சி செய்ததில் அது மன அழுத்தத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. கார்டிசோல் பிரச்சனை இயற்கைக்கு மாறாக டெஸ்டோஸ்டிரானை வேகமாக குறைக்க செய்யும். மன அழுத்தம் கார்டிசோல் உணவை உண்ணுவது எடை அதிகரிப்பு போன்றவை உடல் உறுப்புகளை சுற்றி தீங்கு விளைவுக்கும் என்பதோடு உடல் கொழுப்பையும் சேகரிக்கும். இது டெஸ்டோஸ்டிரானை எதிர்மறையாக பாதிக்க செய்யும்.

மன அழுத்தத்தை குறைக்க செய்யும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி, ஆழ்ந்த அல்லது போதுமான தூக்கம், மகிழ்வான மன நிலை உங்கள் மன அழுத்தத்தை குறைக்க செய்வதோடு உடல் நலம் மற்றும் டெஸ்டோஸ்டிரான் அளவையும் மேம்படுத்தலாம்.

தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியிடமிருந்து வைட்டமின் டி பெறுவதை தவிர்க்க வேண்டாம். வைட்டமின் டி பல்வேறு சுகாதார நன்மையை உடலுக்கு வழங்குகிறது. இது இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரான் பூஸ்டராக செயல்படுகிறது.

மல்டி வைட்டமின்கள் அதிக நன்மைகள் அளிப்பவை. குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றூம் தாதுக்கள் நன்மை பயக்க கூடியவை.ஆய்வு ஒன்றில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி சப்ளிமெண்ட்ஸ் விந்தணுக்களின் தரத்தை 74 % அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.துத்தநாகம் டெஸ்டோஸ்டிரான் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்கு அதை மேம்படுத்த உதவுகிறது. இது குறித்த பிற ஆய்வுகள் பாலியல் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் அளவுகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ – யும் ஒரு பங்கை கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. எனினும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த ஆராய்ச்சியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி இரண்டுமே டெஸ்டோஸ்டிரான் மேம்படுத்த சிறந்தவையாக சொல்லப்படுகிறது.

மல்டி வைட்டமின்கள் அதிக நன்மைகள் அளிப்பவை. குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றூம் தாதுக்கள் நன்மை பயக்க கூடியவை.ஆய்வு ஒன்றில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி சப்ளிமெண்ட்ஸ் விந்தணுக்களின் தரத்தை 74% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.துத்தநாகம் டெஸ்டோஸ்டிரான் குறைபாடு  கொண்டிருப்பவர்களுக்கு அதை மேம்படுத்த உதவுகிறது. இது குறித்த பிற ஆய்வுகள் பாலியல் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் அளவுகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ – யும் ஒரு பங்கை கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. எனினும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த ஆராய்ச்சியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி இரண்டுமே டெஸ்டோஸ்டிரான் மேம்படுத்த சிறந்தவையாக சொல்லப்படுகிறது.

பொதுவாக தூக்கம் என்பது நீடித்த நீண்ட நேரம் தூக்கம் கிடையாது. நாள் ஒன்றுக்கு 6 முதல் 8மணி நேர தூக்கம் என்றாலும் அது ஆழமாக இருக்க வேண்டும். நல்ல தூக்கத்தை பெறுவது ஆரோக்கியமான மற்றும் உடற்பயிற்சியை போன்று ஆரோக்கியம் அளிப்பவை. ஏனெனில் தூக்கமின்மை என்பது டெஸ்டோஸ்டிரான் விளைவுகளை பாதிக்க கூடும்.

தினமும் 5 மணி நேரம் தூங்குபவர்களை ஆய்வு செய்ததில் அவர்களது டெஸ்டோஸ்டிரான் அளவு 15% குறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருபவர்களும் இதை ஒப்புகொள்கிறார்கள். ஒவ்வொரு கூடுதல் ஒரு மணிநேர உறக்கமும் 15% அளவு டெஸ்டோஸ்டிரானை அதிகரிக்க செய்யும் என்று கணக்கிடப்படுகிறது. உங்கள் தூக்கம் 7 முதல் 10 மணி நேரம் வரை இருந்தால் டெஸ்டோஸ்டிரான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரான் அளவை மேம்படுத்த இயற்கையான சில மூலிகைகள் அவ்வபோது சேர்க்கலாம். அதிக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட அஸ்வகந்தா மூலிகையை எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள்.
ஆல்கஹால் பயன்பாட்டுக்கு அடிமையாகும் ஆண்கள் டெஸ்டோஸ்டிரான் அளவை குறைவாக பெறக்கூடும் என்பதில் மாற்றமில்லை. ஆல்கஹால் போன்று போதைபொருள் பயன்பாடு எல்லாமே டெஸ்டோஸ்டிரானை பாதிக்க கூடிய அம்சங்கள்தான். டெஸ்டோஸ்டிரான் அளவை மேம்படுத்த வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.