அசோஸ்பெர்மியா (azoospermia) என்பது முழுமையாக விந்தணுக்கள் இல்லாத நிலையாகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறைந்த விந்தணுக்களை கொண்டு இருப்பார்கள். இந்த பிரச்சினை இருப்பது சோதனை செய்யும் வரை தெரிவதில்லை. இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
ஆண்குறி அடைப்பின் மூலமோ அல்லது வேறு எதேனும் பிரச்சினையா என்பதை கண்டறிவார்கள். ஒராண்டுக்கும் மேலாக மனைவியை கருத்தரிக்க வைக்க முடியாமல் இருந்தால், ஆண்கள் தங்களின் விந்தணுக்களை பரிசோதிக்க வேண்டும். முன்கூட்டியே மருத்துவரிடம் சென்று விந்தணுக்களை பரிசோதனை செய்யும்போது விந்தணுக்கள் இல்லாத நிலைக்கு செல்வதை தடுக்கலாம்.
ஆண்மைச் சுரப்பி என்ற புரோஸ்டேட் (Prostate), சிறுநீர்ப் பையின் அருகே இருக்கும். இதில் சுரக்கும் பசை போன்ற பொருளும் விந்தணுப் பையிலிருந்து உருவாகும் திரவமும் சேரும்போதுதான் விந்தாகிறது. விந்தணுக்கள் இல்லாத நிலையான அசோஸ்பெர்மியாவானது, தடை செய்யும் அசோஸ்பெர்மியா மற்றும் தடை செய்யப்படாத அசோஸ்பெர்மியா இருவகை பாதிப்புகளை கொண்டது. தடை செய்யும் அசோஸ்பெர்மியாவில் விதைப்பையில் விந்தணுக்கள் எல்லாம் உருவாகும், ஆனால் அதை வெளியேற்றுவதில் தடை இருப்பதை காட்டுகிறது. தடைசெய்யாத அசோஸ்பெர்மியாவில் விந்தணுக்கள் உற்பத்தியிலே குறைபாடு இருக்கும்.
தடை செய்யப்பட்ட அசோஸ்பெர்மியா: இந்த பாதிப்பு ஜீன்கள் குறைபாடு அல்லது உறுப்பு பாதிப்பினால் ஏற்படும், விதை அல்லது புரோஸ்டேட் தொற்று ஏற்பட்டு கவனிக்காமல் விட்டுவிட்டால் விந்தணுக்கள் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். முதுகுதண்டுவடம், இடுப்பு, ஆண் உறுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் விந்தணுக்கள் குறைபாடு உருவாக வாய்ப்புகள் உள்ளன.
தடை செய்யப்படாத அசோஸ்பெர்மியா என்பது புற்றுநோய்க்கு மாத்திரை எடுத்திருந்தால் உருவாகும். ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவையும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக மிக குறைந்த விந்தணுக்கள் உள்ள ஆண்களுக்கு, சில முக்கிய அறிகுறிகளை வைத்து பிரச்சனைகளை கண்டறியலாம். முதல் அறிகுறியாக குழந்தையின்மை, விதைப்பை மிக சிறியதாக இருப்பது, விதைப்பைகளில் சிறு கட்டி அல்லது வீக்கம் இருப்பது, உடல் மற்றும் மன ரீதியாக விருப்பமின்மை, உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பது, உடலுறவின்போது வலி ஏற்படுவது, முகத்தில், மற்றும் மார்பு பகுதிகளில் முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகிய அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.
உயிரில்லாத விந்தணுக்களை தான் (Azoospermia) என்று கூறப்படுகிறது, அதாவது பூஜ்ஜியம் (Zero count) விந்தணுக்களின் எண்ணிக்கை. குறைந்த எண்ணிக்கை அல்லது ஹார்மோன் சமநிலையின்மை (Harmone imbalance) ஆகிய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டு, சரியான முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால், நல்ல தீர்வு கிடைக்கும்
ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டெரோன் மற்றும் போலிக் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் இரண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய மிக மிக இன்றியமையாததாகும். விந்தணுக்கள் உற்பத்திற்கு தேவையான மற்றும் முக்கியமான ஹார்மோன்கள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் (Hypothalamus), பிட்யூட்டரி (Pituitary gland) சுரப்பி ஆரோக்கியமான முறையில் செயல்படுவது மிக மிக அவசியமாகும். அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மிக குறைவாக இருக்கும்.
இதனால் ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count) இருக்கும். விந்தணுக்களின் தரம் மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியில் உயிர் அணுக்கள் இல்லாத விந்து திரவம் காணப்படும். அதில் ஆரோக்கியமற்ற உயிர் அணுக்கள், அவைகளின் அளவு, நீந்தும் வேகம், அணுக்களின் செயல்பாடுகள் எல்லாமே அசாதாரணமாக இருப்பதால், குழந்தை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
ஆண்களின் இந்த தவறான பழக்கவழக்கங்களால் விந்தணு எண்ணிக்கை குறைவாகலாம்:
ஒவ்வொரு ஆண்களுக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியம், மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், ஹார்மோன் சமநிலையின்மை (Harmone imbalance), பரம்பரை குரோமோசோம் (Chromosome) மரபணு மாற்றங்கள், வேளை பளு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது, போன்ற பல காரணங்களை பொறுத்தே, ஆரோக்கியமான விந்தணுக்கள், அல்லது குறைந்த விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய அறிகுறியாக இருக்கிறது. அல்லது குறைந்த விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய அறிகுறியாக இருக்கிறது. சிலருக்கு தேவையில்லாத மது அருந்தும் பழக்கம், புகை பிடித்தல், அதிக உடல் பருமன் காரணம், போன்ற பிற காரணத்தினாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.
தொடர்ந்து வரும் மதுப்பழக்கத்தினால் ஆண்மைக் குறைவு நிச்சயம் ஏற்படும். புகையிலை, பான்மசாலா இரண்டினுமே நிகோடின் என்ற விஷத்தன்மை உண்டு. ஆண்மை ஒழித்து, உங்களை நிரந்த நோயாளியாக்கிவிடும்.
இவைகளை உபயோகிப்பதால் ரத்தம் கெட்டு, முகம் ஒளி இழக்கும். கன்னம் உள் ஒடுக்கி, முகம் சப்பையாகி விகாரமாகும். காது மந்தமாகும். அடிக்கடி உமிழ்நீரை துப்பிவிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். நரம்புகள் பாதிக்கப்பட்டு ஆண்மை இழந்து பேடித்தன்மை தலைதூக்கும்.
உடலுக்கு ஏற்பட்ட நோய் தீர வேண்டுமெனில் உடலுக்கு ஒவ்வாதவற்றை நாம் நீக்க வேண்டும்.