விதைப்பை பாதுகாப்பு

ஆண்களுக்கு கீழே தொங்கும் இதயம் விதைகள். இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல விதைகளும் முக்கியம். ஒவ்வொரு ஆண்களும் விதைகளை பலப்படுத்தும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். விதைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆதவன் பார்மா-வில் சிறந்த மருத்துவ முறையின் மூலம் இயற்கையாக குணப்படுத்தப்படுகிறது.

விதைப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்:

 • விதைப்பை வலி
 • விதைப்பை வீக்கம்
 • விதைகள் சிறுத்து போதல் (வளர்ச்சியின்மை)
 • விதைகளில் நீர்க்கட்டி
 • விதை நாள நரம்பு சுருள்

நாம் வாழும் இந்த சமூகமானது திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் பெரும்பாலும் பெண்களையே பெரிதும் குறை கூறுகின்றது. ஆனால் மனைவியிடம் மட்டும் குறை இருப்பதில்லை. அது கணவரிடமும் இருக்கலாம். அவ்வாறு ஆணின் மலட்டுத்தன்மை இருக்குமாயின் மறு திருமணம் என்பது பயனற்றதாகின்றது.

வெரிகோசெல் (விதைப்பை நரம்பு சுருள்) என்றால் என்ன?

ஆண்களுக்கு வெரிகோசெல் மிகவும் பொதுவான நிலை, அவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தை பாதிக்கிறது. வெரிகோசெல்ஸ் நிலையில், விதைப்பையில் உள்ள நரம்புகள் பார்வைக்கு பெரிதாக, பருத்து வீங்கி அல்லது முறுக்கப்பட்டதாக மாறும். சேதமடைந்த நரம்பு வால்வுகள் காரணமாக இது நிகழ்கிறது. சேதமடைந்த வால்வுகள் சரியாக செயல்படாமல், இதன் விளைவாக இரத்தத்தில் ( பின்னோக்கி வழிதல்) ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இரத்தம் பின்னர் நரம்புகளில் குவியத் தொடங்குகிறது, இதனால் அவை பருத்து வீங்கி பெரிதாகின்றன. வெரிகோசெல்ஸ் பெரும்பாலும் விந்து குழாயில் விந்தணு உற்பத்தி குறைபாட்டை ஏற்படுத்துகிறது, இது கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், எனவே சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம்.

விரை நாணுடன் காணப்படும் பம்பினிஃபார்ம் பிளக்சஸின் நரம்புகளில் ஏற்படும்வீக்கமே (ஒரு ஆண்மகனின் விந்தகத்தை கொண்டிருக்கும் வடம்) விந்துக் குழாய் சிரைச்சுருள் (நரம்பு சுருள்) என்றழைக்கப்படுகிறது. விந்துக் குழாய் சிரைச்சுருள் எனும் நிலை 100 ஆண்களில், ஒவ்வொரு 10 முதல் 15 ஆண்களுக்கு வளரக்கூடியது, இது கால்களிருக்கும் சுருள் சிரையை ஒத்திருக்கக்கூடியது.

வெரிகோசெல் (விதைப்பை நரம்பு சுருள்) அறிகுறிகள்?

விந்துக் குழாய் சிரைச்சுருளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

 • அசௌகரியம்
 • மந்தமான வலி
 • விதைப்பை வீக்கம்
 • விதைப்பையிலிருக்கும் நரம்புகள் விரிவடைந்தோ, அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருப்பது
 • வலியில்லாத விதை முடிச்சு
 • இடுப்புதொடை நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு
 • குழந்தையின்மை
 • விந்து உற்பத்தி பாதிப்பு
 • குறைவான விந்துகளின் எண்ணிக்கை
 • உடல் சூடு
இதுஎவ்வாறுகண்டறியப்படுகிறது?

மருத்துவர் அறிகுறிகளின் முழுமையான வரலாற்றை எடுத்துக்கொள்வதோடு, விதைப்பை மற்றும் விந்தகங்கள் இடம் பெற்றிருக்கும் வயிறு-தொடை இணைவிடத்துடன் விரை நாணில் ஏதேனும் நரம்புகள் சுருள் நிலையில் இருக்கிறதா என்பதை சரிப்பார்த்தால் போன்ற முழுமையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், மருத்துவர் விதைப்பை, விந்தகம் மற்றும் சிறுநீரகங்களுக்கு அல்ட்ராசவுண்ட் சோதனையை பரிந்துரைக்கலாம்.

வலி, கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை மற்றும் விந்தகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடு (வலதுபுறத்தை விட இடது புறம் மெதுவாக வளருதல்) போன்ற குறைபாடுகளை எதிர்கொள்ளும் வரை விந்துக் குழாய் சிரைச்சுருள் நிலைக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

உடலின் உடற்கூறியல் காரணமாக வெரிகோசெல்ஸ் இடது பக்கத்தில் அதிகம் காணப்படுகிறது. ஆணின் உடல் வலது பக்கத்தை விட இடது பக்கத்திற்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இடது பக்க வெரிகோசெல்ஸின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

வெரிகோஸ் வெயின் குணமாக
 • உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் இரு வேளை குளித்தல் மிகவும் நல்லது.
 • குவளையில் நீர் நிரப்பி விதைகளை அதில் போட்டு அரை மணி நேரம் குறிகுளியல் செய்ய வேண்டும்.
 • தினமும் காலை உணவாக பார்லி கஞ்சி செய்து சாப்பிடுவது நல்லது.
 • இரவில் விதையுள்ள திராட்சை, கொய்யா பழங்களை சாப்பிடுவது நல்லது.
 • நீரேற்றமாக இருங்கள் மற்றும் நீர் பெருக்கி உணவைப் பின்பற்றுங்கள.
 • விதை (Scrotum) பகுதியில் அதிக அழுத்தத்தைத் தவிர்க்கவும், அதிக எடை தூக்குதல் மற்றும் தீவிரமான உடற்பயிற்சியை தவிர்க்கவும்.