ஒரு ஆண் தன் இணைக்கு பாலியல் உறவில் முழு திருப்தி படுத்த இயலாத குறைபாடே ஆண்மைக்குறைவு. ஆண்மைக்குறைபாட்டில் ஆண்குறி விறைப்பின்மை வெகு விரைவாக விந்து வெளியாதல் போன்ற பிரச்சனைகளே காரணம்.
தற்போதைய நாகரிக உலகில், முன்பு இல்லாத அளவிற்கு இளம் வயது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை, நரம்பு தளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் விந்தணுக்கள் குறைபாடு போன்ற ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகிறது.
அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதாவது சுய இன்ப அடிமைகள், விந்தணுவை விரையம் செய்வதால் ஆண்மை குறைவு ஏற்படும். இந்த சுய இன்ப அடிமைகள் முதலில் அவர்களுடைய தன்னம்பிக்கையை இழப்பார்கள். அத்துடன், கூட்டத்தில் செல்வதற்கு பயம்; தனிமையாகவே இருத்தல், சமூகத்தில் ஒன்றிணைந்து வாழாமல் ஒதுங்கி இருத்தல் உள்ளிட்டவற்றில் சிக்குவார்கள். அதே போல வரம்பு மீறி அடிக்கடி உடலுறவு கொண்டாலும், உடல் பலவீனம் ஏற்பட்டு ஆண்மைக்குறைவு ஏற்படும்.
அதீத உடல்சூடு காரணமாகவும் ஆண்மைக் குறைபாடு ஏற்படும். இயல்பாவே சிலபேருக்கு உடல் சூடு அதிகமா இருக்கும். அதிக தூரம் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து பயணங்கள் காரணமாகவும் உடல்சூடு ஏற்பட்டு ஆண்மைக்குறைவு உண்டாகும். அதீத உடல் சூட்டினால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும் மற்றும் விரைவில் விந்து வெளியாகும்.
ஆண்களுக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்ட்டிரோன் உற்பத்தி குறைபாட்டினால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
ஆண்மைக்குறைவு உண்டாவதற்கு துரித உணவுகள், பாக்கெட் உணவுகள் மற்றும் பிராய்லர் போன்ற உணவு மாற்றமும் ஆண்மைக்குறைவுக்கு காரணம்.
பொதுவாக ஆண்களுக்கு அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை ஆண்மைக்கான ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதன் வீரியத்தை, அவர்கள் காலை சிறுநீர் கழிக்கும் போது உணரமுடியும். அப்படி உங்களால் உணர முடியவில்லை என்றால், உங்களுக்கு ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள் இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
ஆதவன் பார்மா வழங்கும் ஆப்பிள் டயட் மற்றும் நியுரோ டயட் வகைகளை பின்பற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பேரிச்சம்பழம், கீரை வகைகள், பாதம், அத்தி போன்ற உணவுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு மற்றும் விந்து கெட்டிப்படுதலுக்கு ஏற்ற உணவுகளை பின்பற்ற வேண்டும்.
சுத்தமான பாலில், அதிகமான புரோட்டீன் இருக்கிறது பேரிச்சம் பழத்தில் அயன் சத்து இருக்கிறது. இதை நீங்கள் ஒன்றாக சாப்பிட்டால், உங்கள் உடல் பலமானதாக மாறும்.
இந்த ஊட்டச்சத்து சார்ந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது. இது உங்கள் உடல் முழுக்கவும் சென்று சேர வேண்டும். அதற்கு உதவுவதுதான் நைட்ரஸ் ஆக்சைடு! அந்த நைட்ரஸ் ஆக்சைடு அதிகம் உள்ள கருப்பு மொச்சையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது மொச்சை காம இச்சையை தூண்டும்.
பீட்ரூட், தர்பூசணி, மாதுளை, வெள்ளைப்பூண்டு, மிளகு ஆகியவற்றை அரைத்து ஜூஸாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் குடிக்கும் பொழுது, உங்களுடைய இரத்த குழாய்கள் விரிவடைந்து எல்லா பக்கமும் ரத்தம் சரிவர செல்லும். இதையெல்லாம் விடவும் மிக முக்கியமான ஒன்று எக்காரணத்திற்கொண்டும் இரவு நேர தூக்கத்தை தவிர்க்கவே கூடாது.