விந்தணு குறைபாடு என்பது குழந்தை கரு உருவாதலுக்கு தேவையான விந்தணுக்களின் அளவு ஒரு ஆணுக்கு இல்லாமல் குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் காணப்படுவதாகும்.
நாம் வாழும் இந்த சமூகமானது திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் பெரும்பாலும் பெண்களையே பெரிதும் குறை கூறுகின்றது. ஆனால் மனைவியிடம் மட்டும் குறை இருப்பதில்லை. அது கணவரிடமும் இருக்கலாம். அவ்வாறு ஆணின் மலட்டுத்தன்மை இருக்குமாயின் மறு திருமணம் என்பது பயனற்றதாகின்றது.
ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவில்லை என்றால் கண்டிப்பாக எத்தனை பெண்களை திருமணம் செய்தாலும் குழந்தை பெற முடியாது. காரணம் ஆண்களுக்கு எத்தகைய பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வு பெருவது சிறந்தது.
எல்லா ஆண்களுக்கும் ஒரே அளவிலான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பதில்லை. ஆண்களின் வயது, தேக ஆரோக்கியம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரியாக விந்தணு எண்ணிக்கை மாறுபடும்.
எனினும் சராசரியாக விந்தணு எண்ணிக்கையிலும் குறைவாக (உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அளவு – ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள்) இருப்பின் விந்தணு குறைபாடு பிரச்சனை இருப்பதாக கருதப்படுகின்றது.
விந்தணு குறைபாட்டை மூன்று வகையில் நோக்கலாம். அதாவது,
லேசான விந்தணுக் குறைபாட்டுப் பிரச்சனை: இது 10 தொடக்கம் 15 மில்லியன் அளவில் இருக்கும். மிதமான விந்தணு குறைபாடு பிரச்சனை: ஐந்து விளக்கம் 10 மில்லியன் அளவில் இருக்கும். தீவிர விந்தணு குறைபாடு பிரச்சனை: 0 -5 மில்லியன் அளவில் இருக்கும். முற்றிலுமாக விந்தணு குறைபாடு இருப்பது அசூஸ்பெர்மியா என்று கூறப்படுகிறது.
பொதுவாக இயற்கையின் படைப்பில் 19 வயது ஆண்களுக்கு கிழமையில் Testosterone ஹார்மோன் அதிகமாக இருக்கும். இதன் அறிகுறியே முகப்பரு தோன்றல், துருதுரு என வேகமாக இருப்பர், மீசை, தாடி நன்கு வளரும். எனவே பொதுவாக 26 வயது முதல் 35 வயது வரை ஆண்மைத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் திருமணம் செய்யாமல் கால தாமதமாகித் திருமணம் செய்தால் விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது.
பல பெண்களுடன் தொடர்பின் காரணமாக அதிக புணர்ச்சியால் அதிக விந்தணுக்களை இழத்தல் போன்ற பல காரணங்களினால் விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது.
புற்றுநோய், ஆயுட்காலம் குறைதல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறையில் உலகளாவிய நெருக்கடி போன்றவையும் காரணமாகும்.
ஆண்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் உடல் சூடு அதிகம், போன்ற பிரச்சனைகளால் விந்து உற்பத்தி குறைபாடு ஏற்படும்.